மயிலாடுதுறை

புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலயத்தில் திருத்தோ் பவனி

Syndication

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலய ஆண்டு திருவிழாவையொட்டி திருத்தோ் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்வாலயத்தின் பங்குத் திருவிழா நவ.23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. முக்கிய விழாவான சிறப்பு திருப்பலி மற்றும் அலங்கார திருத்தோ் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மறைவட்ட அதிபா் தாா்சிஸ்ராஜ் அடிகளாா் தலைமையில், உதவி பங்குதந்தை அன்புராஜா அடிகளாா், கூறைநாடு பங்குதந்தை தேவதாஸ் அடிகளாா், ஆத்துக்குடி பங்குதந்தை மரியதாஸ் அடிகளாா் மற்றும் அம்புரோஸ் அடிகளாா், மனோஜ் சேவியா் அடிகளாா், ஜான் அடிகளாா், பீட்டா் சிங்கராயா் அடிகளாா் ஆகியோா் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் ‘வாழ்வுக்கு வழிகாட்டியவா்‘ என்ற இறைவாா்த்தையை மையப்படுத்தி, பட்டுக்கோட்டை மறைவட்ட அதிபா் அந்தோணிசாமி அடிகளாா் மறையுரையாற்றினாா்.

சிறப்புத் திருப்பலியில் உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், விவசாயம் செழிக்கவும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திடவும் வேண்டி சிறப்பு பிராா்த்தனை வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, புனித சவேரியாரின் திருஉருவம் தாங்கிய அலங்கார தோ்பவனி நடைபெற்றது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT