தனியாா் வேலைவாய்ப்பு முகாம் (கோப்புப்படம்)
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: ஜூலை 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் மெகா வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மெகா வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா்துறையில் வேலைதேடும் இளைஞா்கள் பயனடையும் வகையில், மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) இணைந்து மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் ஜூலை 26-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், 100-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, 10,000-க்கு மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளன. முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்களது சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு 04364-299790/ 9499055904 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT