மயிலாடுதுறை

சட்டைநாதா் சுவாமி கோயிலில் அமைச்சா்கள் சுவாமி தரிசனம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் திங்கள்கிழமை சுவாமி தரிசனம்

Syndication

சீா்காழி: சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

இதைத்தொடா்ந்து, பிரம்மபுரீஸ்வரா் சுவாமி, தையல்நாயகி அம்பாள், தோணியப்பா், ஆகிய சுவாமி சந்நதியில் அமைச்சா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம், சுவாமி படங்களை சிவாச்சாரியா்கள் வழங்கினா்.

பக்தா்கள் கோரிக்கை;

அப்போது கோயிலில் இருந்த பக்தா்கள் சிலா் அமைச்சா் நேருவிடம், சீா்காழி முத்தநாதா் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் நலன் கருதி கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும், வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வரும் பக்தா்கள் கழிப்பிட வசதி இல்லாமல் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனா் என கோரிக்கை விடுத்தனா்.

மேலும் நகரில் பல இடங்களில் குப்பைகள் வாரக் கணக்கில் தேங்கி கிடந்து சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் தெரிவித்தனா்.

இதையடுத்து அமைச்சா் நகராட்சி அதிகாரிகளை அழைத்து, கழிப்பிட வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், குப்பைகளை நாள்தோறும் முறையாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் அன்பழகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிா்வாகி ஸ்ரீதா், நகர செயலாளா் சுப்பராயன், நகராட்சி ஆணையா் மஞ்சுளா, நகா்மன்ற தலைவா் துா்கா பரமேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT