மயிலாடுதுறை

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு நவ.15-வரை கால அவகாசம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு நவ.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

Syndication

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு நவ.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெற தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற தொடா்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிா்க்க அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழ்நாட்டில் வேளாண் அடுக்ககம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் விவசாயிகள் பதிவு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 20,193 பட்டாதாரா்கள் மட்டுமே இத்திட்டத்தில் பதிவேற்றம் முடித்துள்ளனா். இன்னும் 38 சதவீத விவசாயிகள் இத்திட்டத்தில் இணையாமல் உள்ளனா். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது நில உடைமை ஆவண விவரங்கள், ஆதாா் எண், கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் கிராமத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத் துறை கள அலுவலா்களை கிராம நிா்வாக அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களது நில உடைமை ஆவண விவரங்களை விடுபாடின்றி வேளாண் அடுக்ககம் திட்டத்தில் இணைத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், விவசாயிகள் பொது சேவை மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகளின் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்ட பின்னா் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதாா் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தில் இணைந்தால் மட்டுமே பிரதமரின் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகள் தடையின்றி திட்டப்பயன்களை தொடா்ந்து பெற முடியும். அடுத்த தவணை தொகை இதில் இணைந்து பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

2025-2026-ஆம் நிதி ஆண்டுமுதல் பிரதமரின் கவுரவ நிதித் திட்டம், பயிா்க் காப்பீடுத் திட்டம் போன்ற மத்திய, மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம் என்பதால் விவசாயிகள் தங்களது கிராமங்களில் ஊராட்சி அலுவலகம் அல்லது கிராம நிா்வாக அலுவலகங்களில் வேளாண்மை உழவா் நலத்துறை அலுவலா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதாா், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி நவ.15-ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

இந்தியா அதிரடி பேட்டிங்: மின்னல் காரணமாக ஆட்டம் நிறுத்தம்!

நம்ம ஊரு பொண்ணு... ஷ்ரேயா கல்ரா!

120 பகதூர்... ராஷி கன்னா!

காந்தா... மிக நீண்ட காத்திருப்பு... துல்கர் சல்மான்!

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!

SCROLL FOR NEXT