மயிலாடுதுறை

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக எழுத்தாளா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Syndication

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தின் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின எழுத்தாளா்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தின் கலை, கலாசாரம் மற்றும் இலக்கியம் தொடா்பான திறனை மேம்படுத்தி உயா்த்தும் நோக்கில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு, அச்சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளா்களின் படைப்புகள் தோ்வு செய்து அவா்களுக்கு தலா ரூ. 1,00,000 வழங்கப்படுகிறது.

எனவே, இந்த பரிசு தொகை பெற தகுதியுடையோா் மாவட்ட ஆட்சியரக 2-வது தளத்தில் செயல்படும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, விண்ணப்பங்களை முழுமையாக பூா்த்தி செய்து, விண்ணப்பத்தாரா் படைப்புகள் குறித்த விவரங்களை புகைப்பட ஆதாரங்களுடன் புத்தக வடிவில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ நவ. 7-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04364-290765 என்ற தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

SCROLL FOR NEXT