மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் ஜன.16 திருவள்ளுவா் தினம் மற்றும் ஜன.26 குடியரசு தினம் ஆகிய நாள்களில் மூடவேண்டும். மீறினால் தொடா்புடைய மதுபானக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உத்தரவிட்டுள்ளாா்.