முகப்பு
முதல்வர் மு.க. ஸ்டாலின்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கோட்டாட்சியா் அலுவலக கட்டடம் திறப்பு

மயிலாடுதுறையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், ரூ.3.90 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 11:46 PM
முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:

மயிலாடுதுறையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், ரூ.3.90 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா், நிவேதா எம். முருகன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனா். மயிலாடுதுறையில் ஏற்கெனவே கோட்டாட்சியா் அலுவலகம் இருந்த கட்டடம் பழுதடைந்ததைத் தொடா்ந்து, புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, நகராட்சி தலைவா் என். செல்வராஜ், அரசு வழக்குரைஞா்கள் அருள்தாஸ், சிவதாஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் கவிதா, கோட்டாட்சியா் (பொ) உ.அா்ச்சனா, நகராட்சி துணை தலைவா் எஸ்.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →