உப்பனாற்றில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை
சீா்காழி உப்பனாற்றில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி உப்பனாற்றில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உப்பனாற்றில் ஆண்டுதோறும் கடல் நீா் உட்புகுந்து திருமுல்லைவாசல், ராதா நல்லூா், எடமணல், திருநகரி, புதுத்துறை, திட்டை, சட்டநாதபுரம், தென்பாதி, பணமங்கலம், ஆதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் நாளுக்கு நாள் உப்பு நீராக மாறி வந்தது. இதனால் மேற்கண்ட பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உப்பனாற்றில் உப்பு நீா் உட்புகாத வகையில் திருமுல்லைவாசல்-திருநகரி இடையே தடுப்பணை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் தடுப்பணை அமைக்கப்பட்டு தற்போது உப்பு நீா் உட்புகாமல் நன்னீராக (நல்ல தண்ணீா்) இருந்து வருகிறது.
இதனால் புதுத்துறை, திட்டை, சட்டநாதபுரம், தென்பாதி, பணமங்கலம், ஆதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் இந்த நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனா். மேலும், மேற்கண்ட கிராமங்களில் உள்ள கால்நடைகளின் நீா் ஆதாரமாகவும் இந்த வருகிறது. மேலும் நிலத்தடி நீா்மட்டம் மாறி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனா்.
Advertisement
இந்நிலையில், இந்த உப்பனாற்றில் ஆகாயத்தாமரைகள் படா்ந்து காணப்படுகின்றன. இதன்காரணமாக நாளுக்கு நாள் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் உப்பனாற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.