முகப்பு
நாகப்பட்டினம்

மயிலாடுதுறையில் இலவச தையல் பயிற்சி

மயிலாடுதுறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் இலவச தையல் பயிற்சி முகாம் மே 20-ம் தேதி தொடங்கப்படுகிறது.

Updated On : 12 மே 2013, 6:22 am IST
பகிர்:

மயிலாடுதுறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் இலவச தையல் பயிற்சி முகாம் மே 20-ம் தேதி தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து மயிலாடுதுறை கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநர் வ.சி. பரமசிவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மயிலாடுதுறை கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் அடிப்படை தையல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் மட்டும் பங்கேற்கலாம். மே 20-ம் தேதி தொடங்கி ஜூன் 17-ம் தேதி வரை பயிற்சி நடைபெறும்.

Advertisement

Advertisement

பயிற்சியில் பங்கேற்போரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு, மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் மே 15-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 2, கல்விச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி கல்லூரி அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் சான்றுகளுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டதும் அசல் சான்றுகள் திருப்பி அளிக்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.