நாகை மாவட்டம் குத்தாலத்தில் நகர, ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான குத்தாலம் பி. கல்யாணம் பணியை தொடங்கி வைத்தார். மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான குத்தாலம் க. அன்பழகன் முன்னிலை வகித்தார்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய காவிரி மஹா புஷ்கரம் விழா செப்டம்பர் மாதத்தில் 15 நாள்கள் குத்தாலம் காவிரி ஆற்றில் நடைபெறவுள்ளதால், காவிரி ஆற்றில் சுத்தம் செய்யும் பணியை ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொண்டனர்.
இதில், திமுக நகரச் செயலாளர் சம்சுதீன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.எஸ்.பி.டி. சூர்யா, காவிரி மஹா புஷ்கரம் விழாக் குழுத் தலைவர் ஆர்.பாண்டியன், வர்த்தக சங்க தலைவர் சாமி.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.