நாகப்பட்டினம்

புயலில் சிக்கிய 16 மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தல்

DIN

ஒக்கி புயலில் சிக்கி மாயமான 16 மீனவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
சீர்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செ. ரவி (43), லெ. விமல்ராஜ் (28), கு. தினேஸ்(25), கு. விக்னேஸ் (18),  ம. ராஜேஸ் (27), ர. ரகு (18),  உ. காளியப்பன் (32), கூழையார் மீனவர் தெருவை சேர்ந்த க. தமிழ்பாலன் (31), ஆ. வெங்கடேசன் (52), லெ. கலைமணி (37) கு. ஏழுமலை (39), வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மா. சங்கர் (58), தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்த க. கலைச்சந்திரன் (28), சி. மாயவன் (40), வீ. விஜயநாதன் (25) வெள்ளகோயில் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் ஆகிய 16 பேரும்  தனி, தனியாக கடந்த நவ. 25-ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சின் மற்றும் தேங்காய்பட்டினம் பகுதிகளுக்குச் சென்று மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
ஒக்கி புயலில் 16 மீனவர்களும் சிக்கி இதுவரை கரை திரும்பவில்லை. மேலும், அவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர்கள் கொச்சின், தேங்காய்பட்டினத்துக்குச் சென்று கடலோரக் காவல்படையினரிடமும், சக மீனவர்களிடமும்  விசாரித்ததில் மாயமான மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே, மாயமான மீனவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT