நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன்கோயிலில் ஆடிப்பூர உத்ஸவம் தொடக்கம்

DIN

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவ கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. நவகிரக தலங்களில் செவ்வாய் தலமான இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் ஆடிப்பூர உத்ஸவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், ஆடிப்பூர கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, ஆடிப்பூர அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT