நாகப்பட்டினம்

பேருந்து மீது வேன் மோதி விபத்து: இளைஞர் சாவு

கீழையூர் அருகே பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

DIN

கீழையூர் அருகே பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கீழையூர் அருகேயுள்ள கீழத்தெருவைச் சேர்ந்தவர்கள் முருகேசன் மகன் தமிழரசன் (18), நாகராஜன் மகன் அருண்குமார் (19). சோழவித்யாபுரத்தைச் சேர்ந்த தனபால் மகன் இளமாறன் (30). இவர்கள் திருத்துறைப்பூண்டியிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் தனியார் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பயணம் செய்தனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற பேருந்து, திருப்பூண்டி கடைவீதிக்குச் செல்வதற்காக, கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து பிரிவு சாலையில் திரும்பியுள்ளது. அப்போது வேளாங்கண்ணியிலிருந்து திருத்துறைப்பூண்டி சென்ற வேன், கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து, பேருந்தின் பின்புற படிக்கட்டில் மோதியது.
இதில் படிக்கட்டில் பயணம் செய்த தமிழரசன், அருண்குமார், சோழவித்யாபுரத்தைச் சேர்ந்த இளமாறன் (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து 3 பேரும் திருப்பூண்டி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்குப் பின், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியிலேயே அருண்குமார் இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெறுகின்றனர்.
இதுகுறித்து கீழையூர் போலீஸார் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநரான கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த மாரி (45) என்பவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT