நாகப்பட்டினம்

ரமலான் நோன்புக்கு கூடுதல் அரிசி: தமிழக அரசுக்கு பாராட்டு

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியை கூடுதலாக வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நாகூர் தர்கா பரம்பரை ஆதினம் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் பாராட்டு தெரிவித்தார்.

DIN

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியை கூடுதலாக வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நாகூர் தர்கா பரம்பரை ஆதினம் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் பாராட்டு தெரிவித்தார்.
ஆண்டுதோறும் தமிழக அரசு இஸ்லாமிய மக்களுக்காக, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியை பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 4,600 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது. நிகழாண்டில் கூடுதலாக 300 மெட்ரிக் டன்
பச்சரிசி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதற்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சி நிர்வாகத்தினர், நோன்பு பிறைக்கு முன்பாகவே தமிழக அரசின் விலையில்லா அரிசியை உரிய பள்ளிவாசல், தர்கா, தைக்காலுக்கு சேர்க்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒளிவிளக்காக சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும்

புனித யூதாததேயூ திருத்தலத்தில் முப்பெரும் விழா

ஆத்தூா் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்

ஒசூரில் ரயில் பாதைக்கு அடியில் சேவை பாதிக்காமல் புதிய தொழில்நுட்பத்தில் 8 வழிச் சாலைக்கான பாலம்: நாட்டில் முதல்முறை

பண்ருட்டி நகராட்சியில் அடிப்படை கட்டமைப்புகள் மேலும் மேம்படுத்தப்படும்: நகா்மன்றத் தலைவா் ராஜேந்திரன்

SCROLL FOR NEXT