நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்
செம்பனார்கோயில் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
செம்பனார்கோயில் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோயில், மேமாத்தூர், அரும்பாக்கம், திருவிளையாட்டம், சங்கரன்பந்தல், திருக்கடையூர், ஆக்கூர், பெரம்பூர் மற்றும் கீழையூர் உள்ளிட்ட ஊர்களில் மின்மோட்டார் மூலம் சுமார் 12,000 ஹெக்டேர் பரப்பில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நடவு செய்த நெற் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். சம்பா வயலில் தேங்கிய மழை நீர் விரைந்து வடிய இப்பகுதியில் உள்ள வீரசோழன் ஆற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.