முகப்பு
நாகப்பட்டினம்

மாவட்டத்தில் 10,700 ஹெக்டேரில் பயிர் பாதிப்பு: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையால் 10,700 ஹெக்டேர் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் புதன்கிழமை தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையால் 10,700 ஹெக்டேர் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் புதன்கிழமை தெரிவித்தார்.
கொள்ளிடம் அருகேயுள்ள தண்டேசநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் மூழ்கிய சம்பா பயிரை ஆய்வு செய்து, புதுமண்ணியாற்றிலிருந்து வெள்ள நீர் வெளியேற்றுவதை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மாவட்டத்தில் நேரடி நெல்விதைப்பு பயிர், நடவு பயிர்கள் சேதமடைந்திருப்பது தெரிய வருகிறது. வயல்களில் தேங்கிய மழை நீர் வடிந்த பிறகு சேதம் குறித்து முழு விவரம் தெரியவரும். 9 நாள்களுக்கு மேலாக நீரில் மூழ்கியப் பயிர்கள் வெளியே தெரியவில்லை.  ஆறுகள் உடைப்பு ஏற்படாதது மகிழ்ச்சி. உடைப்பு ஏற்பட்ட வாய்க்கால்கள் கோடைகாலத்தில் முழுமையாக சரிசெய்யப்படும். நாகை மாவட்டத்தில் டிசம்பரில் அதிக மழையை எதிர்பார்க்கும் காலம். வடகிழக்குப் பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை இருக்கும் என்பதால் அதன்பிறகு தான் நிவாரணம் குறித்து பரிசீலிக்கப்படும். நாகை மாவவட்டத்தில் வெள்ள பாதிப்பு கட்டுக்குள் இருக்கக் கூடிய நடவடிக்கையாக உள்ளது என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன். ஆய்வின்போது, சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, மாவட்ட ஜெ.பேரவை செயலர் கே.எம். நற்குணன் ஆகியோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →