நாகப்பட்டினம்

சி.சி.சி. சமுதாயக் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா

DIN

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டின் கீழ் மயிலாடுதுறை சி.சி.சி. சமுதாயக் கல்லூரியில் பயிலும் மாணவியருக்கு சான்றிதழ்கள்,  கட்டணமில்லா  பேருந்து  அட்டைகள் மற்றும்  பாடப்புத்தகங்கள்  பேருந்து பயண அட்டைகள் வழங்கும்  விழா  திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரியின் நிறுவனர், தலைவர் ஆர். காமேஷ் தலைமை வகித்தார். நிர்வாக  இயக்குநர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். விழாவில் மயிலாடுதுறை  தேர்தல் துணை வட்டாட்சியர் எல். சாந்தி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் செ. முனியாண்டி, மத்திய அரசின்  கூடுதல் வழக்குரைஞர் கே. கபிலன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
தொடர்ந்து, கல்லூரியில் அலைடு ஹெல்த் சயின்ஸ் பயிலும்  மாணவியர் 30-க்கும் மேற்பட்டோருக்கு தன்னார்வ முகாம்களில் பங்கேற்றமைக்கான அரசு நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள், தமிழக அரசால் வழங்கப்பட்ட கட்டணமில்லாப் பேருந்து அட்டைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கல்லூரியின் தாளாளர் என். உமா நாகேஸ்வரி, செயலர் வி. லெட்சுமிபிரபா, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வி. சுதா மற்றும்  ஆசிரியர்கள், மாணவியர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT