ரயிலில் அடிபட்டு இரு இளைஞர்கள் சாவு
நாகப்பட்டினத்தில் ரயிலில் அடிபட்டு இரு இளைஞர்கள் இறந்தது புதன்கிழமை காலை தெரிய வந்தது.
நாகப்பட்டினத்தில் ரயிலில் அடிபட்டு இரு இளைஞர்கள் இறந்தது புதன்கிழமை காலை தெரிய வந்தது.
நாகை மேலக்கோட்டை வாசல் அருகே ரயில் தண்டவாளத்தில் இரு இளைஞர்கள் உடல் சிதறிய நிலையில் சடலமாக கிடப்பதாக நாகை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இறந்துபோன இருவரும் பூம்புகார், வானகிரி பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சங்கரநாராயணன் (20), பரசுராமன் மகன் தமிழரசன் (22) என்பதும் இருவரும் நாகை பகுதியில் தங்கியிருந்து மீன்பிடித் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களது உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவர்கள் எந்த ரயிலில் அடிபட்டு இறந்தனர் என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.