நாகப்பட்டினம்

குத்தாலம் அருகே பெண் உடலை அடக்கம் செய்வதில் தகராறு: போலீஸார் சமரசம்

DIN

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே பெண்ணின்  உடலை அடக்கம் செய்வதில் தகராறு ஏற்பட்டதையொட்டி,  போலீஸாரின் சமரசத்தால் புதன்கிழமை  மாலை அடக்கம் செய்யப்பட்டது.
தேரழந்தூர் பெருமாள் வடக்கு வீதியைச் சேர்ந்த முஹம்மது நூர்தீன் மனைவி ஹைருன்னிஷா (65), செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது மகன் ஜின்னா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரிவில் இருப்பதால், தன் தாய் உடலை தானே தொழுகை செய்து பள்ளிவாசல் பகுதியில் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இறந்தவர் உடலை இஸ்லாமியர் வழக்கப்படி பள்ளிவாசலுக்கு  கொண்டு வந்து, அங்கு தொழுகை செய்த பிறகுதான் அனுப்புவோம் என்று உள்ளூர் ஜமாஅத்தார்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
தகவலின்பேரில், விரைந்து வந்த மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளர் கலிதீர்த்தான், வட்டாட்சியர் திருமாறன், காவல் ஆய்வாளர்கள் சுகுணா, ஆனந்த தாண்டவம் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் இறந்தவர்  உடலுக்கு முதலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொழுகை நடத்திய பின்னர், உள்ளூர் ஜமாஅத் தொழுகை நடத்த பள்ளிவாசலில்  ஒப்படைக்க வேண்டும். பின்னர், தொழுகைக்கு பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து, அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புதன்கிழமை மாலை ஹைருன்னிஷா வீட்டு அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொழுகை நடத்தி ஊர்வலமாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீரென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர், உள்ளூர் ஜமாத்தினர் உடலுக்கு தொழுகை நடத்துவதற்குள் மயானத்தின் பின்புற வழியாக தூக்கிச் சென்றனர். பின்னர், அங்குள்ள கேட்டை உடைத்து அடக்கம் செய்ய முயன்றனர்.
அப்போது உள்ளூர் ஜமாஅத்தினரும் பள்ளிவாசல் வழியாக மயானத்தின் உள்ளே சென்று அவர்களை தடுக்க
முயன்றனர்.
போலீஸாரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து மீண்டும் உள்ளூர் ஜமாஅத்தினர் தொழுகை நடத்த பள்ளிவாசலில் உடல்   ஒப்படைக்கப்பட்டது. தொழுகை நடத்தியப்பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT