முகப்பு
நாகப்பட்டினம்

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 8 குடும்பங்களுக்கு உதவி

சீர்காழியில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஈசானியத் தெருவில் உள்ள 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.

நாகப்பட்டினம்

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 8 குடும்பங்களுக்கு உதவி

சீர்காழியில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஈசானியத் தெருவில் உள்ள 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

சீர்காழியில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஈசானியத் தெருவில் உள்ள 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ.80 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கி  ஆறுதல் கூறினார் கல்வி நிறுவனங்களின் தலைவர்  கே.வி.இராதாகிருஷ்ணன்.
 சீர்காழி அருகே ஈசானிய தெருவில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட தீவிபத்தில்  8 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 8 வீடுகளில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன்,  குட் சமாரிட்டன் கல்வி நிறுவன இயக்குநர் பிரவீன்வசந்த்ஜபேஷ் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் 80 ஆயிரம் ரொக்கப் பணமும், 10 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரணப்பொருள்கள் வழங்கி ஆறுதல் கூறினர்.  பள்ளி முதல்வர் ஜோஷ்வாபிரபாகரசிங்,  பட்டதாரி ஆசிரியர் கோவி.நடராஜன்,  முன்னாள் கவுன்சிலர் சேகர்,  நாடார்  சங்க பிரமுகர்கள் பாலமுருகன், குருசாமி மற்றும்  முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →