நாகப்பட்டினம்

நாகையில் சமுத்திர பூஜை

நாகை அக்கரைப்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் செடில் உத்ஸவ நிகழ்ச்சியாக சமுத்திர பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

DIN

நாகை அக்கரைப்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் செடில் உத்ஸவ நிகழ்ச்சியாக சமுத்திர பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
நாகை அக்கரைப்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் செடில் உத்வஸம் செப். 2-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக தினமும் வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சமுத்திர பூஜை புதன்கிழமை காலை நடைபெற்றது.  உத்ஸவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்ட பின்னர், அக்கரைப்பேட்டை கடற்கரைக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
அங்கு, தேங்காய், வாழைப்பழம், பூ, ஊதுபத்தி உள்ளிட்ட தாம்பூலத் தட்டுடன் பெண்கள் வரிசையாக நின்று சமுத்திர ராஜனை வழிபட்டனர். கடற்கரையில் உத்ஸவமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சமுத்திர ராஜனுக்கான அபிஷேகமாக,  பால், பன்னீர், மஞ்சள் நீர் உள்ளிட்ட திரவியங்களை  பாரம்பரிய முறைப்படி கடலுக்கு அர்ப்பணித்து வணங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT