நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு

DIN

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 63 நாயன்மார்களும் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, 63 நாயன்மார்களுக்கும் பால், இளநீர் மற்றும் பல்வேறு வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
இதில் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், கோயில் அர்ச்சகர் பட்டாபிராம குருக்கள், நாயன்மார்கள் வழிபாட்டு மன்றத் தலைவர் பாபு, துணைத் தலைவர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT