நாகப்பட்டினம்

மாநில போட்டி: விக்டோரியா கிரிக்கெட் கிளப் வெற்றி

DIN

மயிலாடுதுறை அருகேயுள்ள மேலையூர், கருவாழக்கரை அழகுஜோதி அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 
விக்டோரியா கிரிக்கெட் கிளப் மற்றும் அழகுஜோதி அகாதெமி  பள்ளி நிர்வாகம் சார்பில் ஏப்.11, 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14 அணிகள் பங்கேற்றன.
இதில் வெற்றி பெற்ற விக்டோரியா கிரிக்கெட் கிளப் அணியினருக்கு, மாவட்ட கிரிக்கெட் சங்க கெளரவச் செயலாளர்கள் இ. இளங்கோவன் (திருச்சி), வி. பசுபதி (திருவாரூர்), நெறியாளர் எஸ்.ஏ. முத்துக்குமாரராஜா ( நாகை) ஆகியோர் பரிசுகள் வழங்கி, பாராட்டுத் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைவர் ஏ. கண்ணன், தாளாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT