முகப்பு
நாகப்பட்டினம்

"நாட்டுப்புற இலக்கியங்கள் வாழ்வியலை நெறிப்படுத்தும்'

நாட்டுப்புற இலக்கியங்களான கதைகள், பாடல்கள் யாவும் மனிதனின் வாழ்வியலை நெறிப்படுத்துகிறது என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் மணலி சோமசுந்தரம்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:55 am IST
பகிர்:

நாட்டுப்புற இலக்கியங்களான கதைகள், பாடல்கள் யாவும் மனிதனின் வாழ்வியலை நெறிப்படுத்துகிறது என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் மணலி சோமசுந்தரம்.
வேதாரண்யத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் இலக்கியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கி மேலும் அவர் பேசியது: தமிழர்களின் மொழி, பண்பாடு, கலாசாரம் யாவும் தொன்மையானது. தேசிய நிலையில் தமிழகம் கல்வியில் முதலிடத்தை வகிப்பது பெருமையடைவதாக உள்ளது. அதேநேரத்தில், தமிழில் பேசத் தெரியாமல் இருப்பவர்களை எண்ணும்போது வேதனையளிக்கிறது.
மாணவர்கள் பெற்றோரை மதிக்கவும், அவர்களுக்கு பெருமை சேர்க்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். அது பெற்றோருக்கு மகிழ்ச்சியை தரும். மாணவர்கள் தங்களின் நிலையை உயர்த்திக்கொண்டால், அதுஅவர்களின் குடும்பத்தாரை மட்டுமல்லாது ஊறார், சுற்றத்தார் என பலரும் தங்களுக்கு கிடைத்த பெருமையாக கருதும் நிலை உருவாகும். நாட்டுப்புற இலங்கியங்கள் காணாமல்போவது கவலையளிக்கிறது. நாட்டுப்புற இலங்கியங்களில் கூறப்படும் கருத்துகள் வாழ்வியலை நெறித்துப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், மாணவர்கள் நாட்டுப்புற இலக்கியங்களை விரும்பி கற்று பயன்பெற வேண்டும். அத்துடன், நாட்டுப்புறக் கலைகளையும் நேசித்து போற்றி பாதுகாக்க வேண்டும் என்றார் சோமசுந்தரம்.   கல்லூரி முதல்வர் பி. முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழ்த்துறை பேராசிரியர் த. ராஜா, பல்வேறு துறைத் தலைவர்கள் பாரதிஸ்ரீ, ச. சுந்தரம், வி. தீனதயாளன், க. இளங்கோவன், அ. தாமரைச்செல்வி, எஸ். தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.