அம்பாளுக்கு சுடிதார் அணிவித்த மாயூரநாதர் கோயில் அர்ச்சகர்கள் 2 பேர் பணி நீக்கம்
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் திருக்கோயிலில் உள்ள அருள்மிகு அபயாம்பிகைக்கு
நாகப்பட்டினம்அம்பாளுக்கு சுடிதார் அணிவித்த மாயூரநாதர் கோயில் அர்ச்சகர்கள் 2 பேர் பணி நீக்கம்
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் திருக்கோயிலில் உள்ள அருள்மிகு அபயாம்பிகைக்கு
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் திருக்கோயிலில் உள்ள அருள்மிகு அபயாம்பிகைக்கு சுடிதார் அணிவித்து, வழிபாடுகள் செய்த கோயில் அர்ச்சகர்கள் 2 பேர் திங்கள்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது.மிகவும் பிரசித்திப் பெற்ற இக்கோயிலில், அருள்மிகு அபயாம்பிகை தனி சன்னதி மயிலாடுதுறை வடக்கு ராமலிங்கத் தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் குருக்கள் என்பவர் கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக அர்ச்சகராகப் பணியாற்றி வருகின்றார்.இவரது மகன் ராஜ் குருக்கள்கடந்த 6-மாத காலமாக கோயிலில் பூஜைகளை செய்து வருகின்றார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அருள்மிகு அபயாம்பிகைக்கு,வழக்கத்திற்கு மாறாக பெண்கள் அணியும் ஆடைகளில் ஒன்றான சுடிதார் அணிவித்து, பூஜைகள் செய்துள்ளார்.சுடிதாரில் அலங்கரிக்கப்பட்ட நிலையிலிருந்த அபயாம்பிகையை,வழிபாட்டிற்கு வந்திருந்த பக்தர்களில் சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலை தளங்களிலும் பரவிட்டனர். இதனைத் தொடர்ந்து அந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதால் ஆன்மிகப் பற்றாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் கோயில் அர்ச்சகரின் இச்செயலுக்கு சிலர் கண்டணம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோயில் கண்காணிப்பாளர் எஸ்.குருமூர்த்தி மற்றும் நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு,கோயில் அர்ச்சகர்கள் கல்யாணசுந்தர குருக்கள்(75) மற்றும் ராஜ்(45) குருக்கள் ஆகிய 2 பேரையும் திங்கள்கிழமை பணி நீக்கம் செய்தனர்.