நாகப்பட்டினம்

அடகுக் கடை உரிமையாளர் வீட்டில் நகைகள் திருட்டு

DIN

நாகையை அடுத்த கீழ்வேளூர் அருகே அடகுக் கடை உரிமையாளர் ஒருவரது வீட்டிலிருந்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போனது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
கீழ்வேளூர் அருகே உள்ள இலுப்பூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாபு என்ற கிருஷ்ணசாமி. இவரும், இவரது சகோதரர் சீனிவாசன் என்பவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும், கீழ்வேளூரில் நகை அடகுக் கடை ஒன்றை நிர்வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு சீனிவாசன் மற்றும் அவரது மனைவி மற்றும் தாயார் ஆகியோர் வெளியூர் சென்றுள்ளனர். கிருஷ்ணசாமியும் அவரது மனைவியும்  வீட்டின் மேல்தளத்தில் தங்கியிருந்தனராம். வியாழக்கிழமை காலை கிருஷ்ணசாமி கீழ்த்தளத்துக்கு இறங்கி வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், கீழ்த்தளத்தில் இருந்த 4 பீரோக்களை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. 
சுமார் 35 பவுன் நகைகள் மற்றும் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியன திருட்டுப்போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் கைரேகளைப் பதிவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT