வனமகோத்ஸவ வார விழா நிறைவு
நாகை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தில் உள்ள சுபம் வித்யாமந்திர் பப்ளிக் பள்ளியில் வனமகோத்ஸவ வார விழா அண்மையில் நிறைவடைந்தது.
நாகை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தில் உள்ள சுபம் வித்யாமந்திர் பப்ளிக் பள்ளியில் வனமகோத்ஸவ வார விழா அண்மையில் நிறைவடைந்தது.
இப்பள்ளியில் வனமகோத்ஸவ விழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. நிகழ்ச்சியை சுபம் லிட்டில் ஏஞ்சல் பள்ளி தாளாளர் ஹர்ஷாசுதேஷ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். முதல் நாள் நிகழ்ச்சியில் பள்ளியின் பசுமைக்குழு சார்பில், வனப் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. 2-ஆம் நாள் பசுமைப்புரட்சி குறித்து ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. 3-ஆம் நாள் வனங்களின் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியரின் மாறுவேட போட்டிகள் நடைபெற்றன. 4-ஆம் நாள் வினா- விடை போட்டிகளும், 5-ஆம் நாள் சுற்றுச்சூழல் மேம்பாட்டின் அவசியம் குறித்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 6-ஆம் நாள் நிறைவில் சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் தலைமையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் சுதேஷ்ஜெயின் முன்னிலை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்.