முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்கள்: தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளால் இறப்பதாக தகவல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையில் 4 டால்பின்கள் இறந்த நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையில் 4 டால்பின்கள் இறந்த நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோடியக்கரை, வேதாரண்யம் கடல் பரப்பில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகளவில் காணப்பட்ட டால்பின்கள் பார்வையாளர்கள் அருகாமையில் காணும் அளவில் இருக்கும். இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். பல்வேறு காரணங்களால் இதன் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, கடந்த சில ஆண்டுகளாக பெயரளவிலான எண்ணிக்கையில் மட்டுமே டால்பின்கள் காணப்படுகின்றன. 
இதனிடையே, மீன்பிடி படகு, வலைகளால் பாதிப்புக்குள்ளாகும் டால்பின்கள் இறந்து கரை ஒதுங்குவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், வேதாரண்யம் மணியன்தீவு கடற்கரையில் 4 டால்பின்கள் இறந்து அழுகிய நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கின. தகவலறிந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு கடற்கரையில் இறந்த டால்பின்களை புதைத்தனர்.
இதுகுறித்து கோடியக்கரை வனச் சரக அலுவலர் அயூப்கான் கூறியது: மீன்பிடி படகு, வலைகளால் பாதிப்புக்குள்ளாகும் டால்பின்கள் உயிரிழக்க நேரிடுகிறது. குறிப்பாக, தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலைகள் பயன்படுத்துவது பாதிப்புக்கு முக்கிய காரணமாகிறது. எனவே, தடைசெய்யப்பட்ட வலைகளை மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →