நாகப்பட்டினம்

குழாயிலிருந்து வீணாக வெளியேறும் குடிநீர்

DIN

சீர்காழி அருகேயுள்ள வெள்ளக்குளம் கிராமத்தில் கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளக்குளம் மெயின்ரோடு பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு  குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 
இதற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திறந்து மூடும் வசதி செய்து தரப்படாததால், வெள்ளக்குளம் கிராமத்தில் 5 இடங்களில் உள்ள குடிநீர் குழாய்களிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், இந்த குடிநீர் குழாய்களில் திறந்து மூடும்  வசதியை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT