முகப்பு
நாகப்பட்டினம்

இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதல்: பாலிடெக்னிக் மாணவர் சாவு: குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

நாகை மாவட்டம், பூம்புகார் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதியதில், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.பூம்புகார் அருகேயுள்ள பல்லவனம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன்

Updated On : 15 மே, 2018 at 5:25 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

நாகை மாவட்டம், பூம்புகார் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதியதில், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
பூம்புகார் அருகேயுள்ள பல்லவனம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரகுவேலன் (22). இவர் திருக்கடையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ரகுவேலன் தனது இருசக்கர வாகனத்தில் பூம்புகாரை அடுத்த மேலையூரில் இருந்து பல்லவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
பல்லவனம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த சுற்றுலா பேருந்து திடீரென ரகுவேலனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, சுற்றுலா பேருந்து நிற்காமல் சென்றது.
அப்போது அந்த வழியாக காரில் வந்த தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பவுன்ராஜ், பாரதி ஆகியோர் ரகுவேலன் இறந்து கிடப்பதைக் கண்டு, அமரர் ஊர்திக்குத் தகவல் கொடுத்தனர். மேலும், சம்பந்தப்பட்ட சுற்றுலா பேருந்தைப் பிடிக்குமாறு திருவெண்காடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள காவல்நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில், திருவெண்காடு காவல் ஆய்வாளர் வேலுதேவி மற்றும் போலீஸார் அந்தப் பேருந்தை மடக்கிப் பிடித்தனர். இதனிடையே, ரகுவேலனின் சடலத்தைப் பார்த்து அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
அவர்களுக்கு அமைச்சர் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆறுதல் கூறினர். இந்த விபத்து குறித்து பூம்புகார் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.