மன்னார்குடி அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு விருது
மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் நான்கு பேருக்கு, தமிழக அரசின் சிறந்த செவிலியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் நான்கு பேருக்கு, தமிழக அரசின் சிறந்த செவிலியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் சனிக்கிழமை, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது. இதில், சிறந்த சேவை விருதுக்கு தேர்வான மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றும் செந்தாமரை, ரேணுகா, பிரபாவதி, அற்புதராணி ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருதை தமிழக சுகாதரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். விருது பெற்ற செவிலியர்கள் நான்கு பேரையும், மருத்துவமனை தலைமைக் கண்காணிப்பாளர் ஜெ. அசோகன் உள்ளிட்ட மருத்துவர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் பாராட்டினர்.