நாகப்பட்டினம்

புயல் பாதிப்பு: 25 லிட்டர் மண்ணெண்ணெய், 50 கிலோ அரிசி இலவசமாக வழங்க வேண்டும்

DIN

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லிட்டர் மண்ணெண்ணெய், 50 கிலோ அரிசி ஆகியவற்றை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி தேசிய பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசியும், 1 லிட்டர் மண்ணெண்ணெயும் இலவசமாக வழங்கி வருவது போதுமானதாக இல்லை.
சமையல் எரிவாயு மற்றும் காய்ந்த விறகுகள் கிடைக்காத நிலையில், சமைக்க முடியாமலும், விளக்கு எரிக்க முடியாமலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 லிட்டர் மண்ணெண்ணெய், 50 கிலோ அரிசி ஆகியவற்றை தமிழக  அரசு இலவசமாக வழங்க வேண்டும் என எம்.ஜி.கே. நிஜாமுதீன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT