ஆயக்காரன்புலம் மடாலயத்தில் கிருஷ்ணர் திருக்கல்யாணம்
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் முதலியார் குத்தகை ராதா ருக்மணி சமேத கிருஷ்ண மடாலயத்தில் கிருஷ்ணர் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் முதலியார் குத்தகை ராதா ருக்மணி சமேத கிருஷ்ண மடாலயத்தில் கிருஷ்ணர் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டிநடைபெற்ற இத்திருக்கல்யாணத்துக்கு முன்னதாக, கருட வாகனத்தில் கிருஷ்ணர் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் 51 தட்டுகளில் சீர்வரிசை பொருள்களுடன் ஊர்வலமாக வந்தனர். அவர்கள், கிருஷ்ண மடாலயத்தை வந்தடைந்ததும், ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து, சுதர்சன ஹோமம், ஊஞ்சல் உதஸ்வம் போன்ற வழிபாடுகள் நடைபெற்றன. வானவேடிக்கையும் நடத்தப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய கயிறு, லட்டு போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளைஆயக்காரன்புலம் முதலியார் குத்தகை கிராம மக்கள் செய்திருந்தனர்.