முகப்பு
நாகப்பட்டினம்

வீரசோழன்ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டக் கோரிக்கை

பொறையாறு அருகே உள்ள அரும்பாக்கம் வீரசோழன் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:41 AM
பகிர்:

பொறையாறு அருகே உள்ள அரும்பாக்கம் வீரசோழன் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நல்லாடை முக்கூட்டு குரும்பக்குடி கிராமத்தை இணைக்கும் வீரசோழன் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மரப் பாலம் அண்மையில் உடைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் மற்ற பகுதிகளுக்குச் செல்ல பல கி. மீட்டர்  சுற்றிச் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்த இடத்தில்  புதிதாக கான்கிரீட் பாலம்  அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் என்.சந்திரமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.