நாகப்பட்டினம்

மக்கள் குறைதீர் கூட்டம்: 16 பயனாளிகளுக்கு ரூ. 1.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், 16 பயனாளிகளுக்கு ரூ. 1.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்து, வருவாய்த் துறை, சமூகப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ. 1.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வு கோரியும் பொதுமக்களிடமிருந்து 194 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 12 மனுக்களும் பெறப்பட்டு தொடர்புடைய துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் எம். வேலுமணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர். விக்டர் மரிய ஜோசப் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT