நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு, தொகுதிக்குள்பட்ட பகுதியில் கடந்த 10 நாள்களாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கங்களாஞ்சேரி, விற்குடி, வாழ்குடி, காரையூர், திருப்பயத்தங்குடி, பில்லாளி, கீழப்பூதனூர், திருமருகல், திருக்கண்ணபுரம், திட்டச்சேரி, பனங்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு வாக்குச் சேகரித்தார்.
அவருடன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ. பத்மாவதி, திமுக ஒன்றியச் செயலர்கள் ஆர். கே. சரவணன், செல்வ. செங்குட்டுவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் லரர் ஆர்.கே. பாபுஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் ஜெயபால் உள்ளிட்டோர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.