நாகப்பட்டினம்

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மீனவ குடும்பத்தினர்

செம்பனார்கோவிலில் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனர். 

DIN

செம்பனார்கோவிலில் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனர். 
செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட குமாரமங்கலம், சின்னங்குடி பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் சுமார் 300 குடும்பத்தினர் அதிமுகவிலிருந்து விலகி, நாகை வடக்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
 இதுகுறித்து, மீனவ மக்கள் கூறியது:
அதிமுக அரசு மீனவ மக்களுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை. தற்போது மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் மீனவர்கள் நலனுக்கான எந்த திட்டமும் தெரிவிக்கப்படவில்லை. அதனால்தான், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தோம். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கத்துக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்வோம் என்றனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் மிசா மதிவாணன் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT