நாகப்பட்டினம்

கிராமப்புற களப் பயிற்சி

சீர்காழி அருகே சந்தைபடுகை கிராமத்தில் வேளாண்புல மாணவிகளின் கிராமப்புற களபயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

DIN


சீர்காழி அருகே சந்தைபடுகை கிராமத்தில் வேளாண்புல மாணவிகளின் கிராமப்புற களபயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவிகள் (ஜி-28) கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின்கீழ், நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், சந்தைபடுகை கிராமத்தில் தங்கி வேளாண் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதன் தொடக்க விழா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னோடி விவசாயி சுகுமாரன் தலைமையில்  நடைபெற்றது. உழவர் விவசாயக்குழு அமைப்பாளர் ஜி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். வேளாண்  விரிவாக்கத்துறை பேராசிரியர் கே.கனகசபாபதி சிறப்புரையாற்றினார். திட்டப் பொறுப்பாளர் வி.சக்திவேல், இணைப்பேராசிரியர் பி.சண்முகராஜ், உழவியல் துறை பேராசிரியர் எஸ்.பாபு ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT