நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் குறைந்தது மழை

DIN

நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நீடித்து வந்த மழை சீற்றம் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் குறைந்திருந்தது.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நாகை மாவட்டத்தில் கனமழையின் சீற்றம் மேலும் அதிகரித்துக் காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக மழை சீற்றம் குறைந்து வருகிறது. இருப்பினும், அவ்வப்போது லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக தரங்கம்பாடியில் 82 மி.மீ மழை பதிவானது.

மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : சீா்காழி - 76.6. கொள்ளிடம் - 68.8. மணல்மேடு - 53. தலைஞாயிறு - 28.6. நாகப்பட்டினம் - 20.8. மயிலாடுதுறை - 16.7. திருப்பூண்டி - 10.4.

செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் நாகை மாவட்டம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. இருப்பினும், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரத்தில் பலத்த மழை இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT