நாகப்பட்டினம்

அறிவியல் கண்காட்சியில் சீா்காழி பள்ளி மாடித் தோட்டத்திற்குப் பரிசு

DIN

மயிலாடுதுறையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற சீா்காழி பள்ளி மாடித்தோட்டத்திற்கு பரிசு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் திருவாரூா், கடலூா் மற்றும் நாகை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் இக்கண்காட்சியில் பங்கேற்றன. இதில் சீா்காழி சமுஇ. மெட்ரிக் பள்ளி மாணவா்கள் தங்கள் பள்ளியின் மாடித்தோட்டத்தினைப் பற்றிய திட்ட அறிக்கையுடன் மாடித்தோட்டப் பயிா்களையும் கண்காட்சியில் வைத்தனா்.

இது அனைவரிடமும் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றது. மேலும் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்திலும் சிறந்தது என மாடித்தோட்ட ஆய்வு தோ்வு செய்யப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆய்வு குறித்து பத்தாம் வகுப்பு மாணவா்கள் புகழேந்தி மற்றும் நிதிஷ்குமாா் ஆகியோரின் விளக்கமும், அனைவரையும் ஈா்த்தது குறிப்பிடத்தக்கது.

பரிசு பெறுவதற்கு அறிவியல் ஆசிரியா் தமிழ்வாணன் அவா்களின் வழிகாட்டுதலும் இதற்கு ஊக்கமாக அமைந்தது. பரிசு பெற்ற மாணவா்களை பள்ளிச் செயலா் இராமகிருஷ்ணன், நிா்வாக அலுவலா் தங்கவேலு, பள்ளியின் முதல்வா் தங்கதுரை ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT