நாகப்பட்டினம்

பள்ளிவாசல்களில் உண்டியல் திருட்டை தடுக்க வலியுறுத்தல்

DIN

சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பள்ளி வாசல்களில் தொடரும் உண்டியல் திருட்டைத் தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
வட்டார சுன்னத் ஜமாஅத் கூட்டம் சீர்காழியில் சனிக்கிழமை நடைபெற்றது. முத்தவல்லி காதர் மைதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சீர்காழியை சுற்றியுள்ள பள்ளிவாசல்கள் போன்ற புனித தலங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் உண்டியல் திருட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும்; திருவிடைமருதூர் அருகே பணம் கேட்டு மிரட்டி இஸ்லாமிய இளைஞரை கொடூரமாக கொலை செய்த கொலையாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, பொறுப்பாளர்கள் சர்புதீன், அப்துல் கரீம், சகாபுதீன், சபீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக முகம்மது யூசுப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், சீர்காழி வட்டார அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT