நாகப்பட்டினம்

அணுக்கழிவு மையத்தைதமிழகத்தில் அமைக்கக் கூடாது

DIN


தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் நாகை மாவட்ட நிர்வாகிகள்கூட்டம் நாகையை அடுத்த புத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆறு. சரவணன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள நிலையில், காமேஸ்வரம் மற்றும் கீழையூர் பகுதிகளிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் திருடப்பட்டு பிறப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதையும், மணல் திருட்டையும் மாவட்ட நிர்வாகம்  தடுத்து நிறுத்த வேண்டும், கூடங்குளம் அணு மின் நிலையத்தில்அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படவுள்ளதை  தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், பிளஸ் 2 வகுப்பு  பாடப் புத்தகத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை இடம் பெறச்செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அமைப்பின் நாகை மாவட்ட இளைஞரணிச் செயலர் பாண்டி, கீழையூர் ஒன்றியச் செயலர் ஸ்டீபன்,  வேதாரண்யம் நகரச் செயலர் கிஷோர் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT