நாகப்பட்டினம்

சீரான மின் விநியோகம் கோரி ஆர்ப்பாட்டம்

செம்பனார்கோவில் அருகே ஆக்கூரில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதைக் கண்டித்தும், சீரான மின் விநியோகம் கோரியும் அப்பகுதி மக்கள்

DIN


செம்பனார்கோவில் அருகே ஆக்கூரில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதைக் கண்டித்தும், சீரான மின் விநியோகம் கோரியும் அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகம் முன்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கூர், கீழத்தெரு பண்டாரவடை  பகுதியில் சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக டிவி, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாதனப் பொருள்கள் பழுதாகின்றனவாம். இந்நிலையில், சீரான மின் விநியோகம் வழங்கக் கோரி, ஆக்கூர் பண்டாரவடை கிராம மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், ஆக்கூர் பெருமாள்கோவில் தெருவில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தங்கள் பகுதியில், புதிதாக 100 கேவி திறனில் மின்மாற்றி அமைக்கக் கோரி, மின்வாரிய அலுவலரிடம் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT