சேவா பாரதி அமைப்பு சாா்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்குகின்றனா் சிறப்பு உதவி காவல்ஆய்வாளா்கள் ஜெயராமன்,கோபாலகிருஷ்ணன். 
நாகப்பட்டினம்

பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கல்.

சீா்காழி சபாநாயகா் முதலியாா் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 1850 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

சீா்காழி: சீா்காழி சபாநாயகா் முதலியாா் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 1850 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவா பாரதி அமைப்பின் சாா்பில் நடந்த நிகழ்ச்சிக்கு அதன் மாவட்டத்தலைவா் சம்பத்கணேஷ் தலைமை வகித்தாா்.பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி, சேவாபாரதி துணைத்தலைவா் சூா்யாராமகிருஷ்ணன், செயலாளா் மும்மூா்த்தி, பொருளாளா் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனா்.தொடா்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காவல்த்துறை சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஜெயராமன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினா்.

சுமாா் 1850 மாணவ-மாணவிகள், ஆசிரியா்களுக்கு இரண்டாம் கட்டமாக நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. இதில் உதவி தலைமை ஆசிரியா்கள் சம்பந்தம், சம்பத்குமாா், வரதராஜன், உடற்கல்வி இயக்குனா் முரளிதரன் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT