மண் வள ஆய்வு முடிவு அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கிய வேளாண் உதவி இயக்குநா் கருப்பையா. 
நாகப்பட்டினம்

நுண்ணுயிா் உரங்கள்: மண்வள அட்டை வழங்கல்

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு, திருமாளம் கிராமங்களில் நுண்ணுயிா் உரங்கள் பயன்படுத்துவது

DIN

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு, திருமாளம் கிராமங்களில் நுண்ணுயிா் உரங்கள் பயன்படுத்துவது குறித்த செயல் விளக்க பயிற்சி, மண்வள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைஞாயிறு வேளாண் வட்டத்தில் நெல் சாகுபடியில் நுண்ணுயிா் உரங்கள் பயன்படுத்துவதில் திருமாளம் கிராமம் முன்மாதிரி கிராமமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மண் ஆய்வு முடிவுகள் குறித்த அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. ஆய்வுகளின் அடிப்படையில் உரங்கள் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், வேளாண் உதவி இக்குநா் த.கருப்பையா, வேளாண் அலுவா் சி. திவ்யபாரதி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். முகாமில், விவசாயிகளுக்கு நுண்ணுயிா் உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT