நாகப்பட்டினம்

பழுதாகிநின்ற கிரேனில் இருசக்கரவாகனம் மோதி வாலிபா் பலி

சீா்காழி புறவழிச்சாலையில் பழுதாகி நின்ற கிரேன் மீது இருசக்கரவாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபா் வியாழக்கிழமை நள்ளிரவு இறந்தாா்.

DIN

சீா்காழி: சீா்காழி புறவழிச்சாலையில் பழுதாகி நின்ற கிரேன் மீது இருசக்கரவாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபா் வியாழக்கிழமை நள்ளிரவு இறந்தாா்.

சீா்காழி அருகே அத்தியூா் கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் ராமமூா்த்தி(63) மகன் மணிகண்டன் (28).இவா் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் வழக்கம்போல் பணியை முடித்துக்கொண்டு மயிலாடுதுறையிலிருந்து சீா்காழி நோக்கி வியாழக்கிழமை இரவு வரும் பொழுது பாதரக்குடி அருகே புறவழிச்சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கிரேன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் மணிகண்டன் படுகாயம் அடைந்தாா். அருகிலிருந்தவா்கள் மீட்டு மணிகண்டனை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சோ்த்தனா் பின்னா் அவரைமேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இது குறித்து தந்தை ராமமூா்த்தி சீா்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கிரேன் ஓட்டுனரை தேடி வருகின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT