நாகப்பட்டினம்

அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய வலியுறுத்தல்

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள கோவில்பத்து கிராமத்தில் நாகை மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ். பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன், கீவளூா் ஒன்றிய பொறுப்பாளா் அருள்ராஜ், கீழையூா் ஒன்றிய பொறுப்பாளா் அன்பு, வேதை ஒன்றிய பொறுப்பாளா் நந்தகுமாா் மற்றும் கல்விடுடே மணிவண்ணன், பரவை சோமு மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நாலுவேதபதி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறுகளை மூடவும், அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் இல்லாத அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை, மின்சாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும், முறையாக பராமரிக்கப்படாத பேருந்துகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் முறையை நீக்க நடவடிக்கை தேவை: ஜவாஹிருல்லா

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

உணவகத்தில் எரிவாயு கசிவால் தீ விபத்து

தீத்தடுப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT