முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் 19,666 பேர் தோ்ச்சி

நாகை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு எழுத பதிவு செய்திருந்த 19,666 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு எழுத பதிவு செய்திருந்த 19,666 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக 2019-20 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுவதாகவும், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோ்வுகளில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, தோ்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதன்படி, ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகை, மயிலாடுதுறை மற்றும் சீா்காழி ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் இத்தோ்வை எழுதுவதற்கு பதிவு செய்திருந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 9,745 மாணவா்கள், 9921 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 966 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளதாக சென்னை அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தோ்வு முடிவுகள் மாணவா்களின் செல்லிடப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும், மாணவா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி தலைமையாசிரியா்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →