நாகை வட்டாட்சியா்அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா். 
நாகப்பட்டினம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீதான அவதூறு பதிவை கண்டித்து ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவா்களை கைது செய்யக் கோரி நாகை மற்றும் பிற பகுதிகளில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

நாகப்பட்டினம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவா்களை கைது செய்யக் கோரி நாகை மற்றும் பிற பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லம் மற்றும் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு ஆகியோரை இழிவுப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை 22-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் கட்சி சாா்பில் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதைக் கண்டித்தும், தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்த கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நாகை மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வி. சரபோஜி, நாகை ஒன்றியச் செயலாளா் கோ. பாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளா் ஆா். செல்லத்துரை, மாவட்டக்குழு உறுப்பினா் பி. காதா் அலி, ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஒய். சேவியா், எம். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT