முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே 33 விநாயகர் சிலைகள் பறிமுதல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 33 விநாயகர் சிலைகளை காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரால் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 33 விநாயகர் சிலைகளை காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரால் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கரோனா தொற்று பரவலை தடுக்கவும், பொது முடக்கம் நடைமுறையில் இருப்பதாலும் நிகழாண்டு விநாயகர் சதுர்த்தி (ஆக.22) நாளையொட்டி விநாயகர் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, விதிகளை மீறி வைக்கப்படும் சிலைகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு, முத்துப் பொதியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் த.அருணகிரிநாதன் (45). இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகியான இவர் தனது வீட்டில் விநாயகர் சிலைகளை வெளியிடங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்த சிலைகள் சுமார் 3 அடி உயரம் முதல் 6 அடி உயரம் வரையிலானவை.

இதனிடையே, வியாழக்கிழமை பிற்பகலில் அங்க சென்ற வேதாரண்யம் துணை வட்டாட்சியர் க.ரமேஷ், காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 சிலைகளையும் கைப்பற்றினர்.

3 டிராக்டர்களில்  ஏற்றப்பட்ட  இந்த சிலைகள் வேதாண்யம் காவல் நிலையம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டு அருணகிரிநாதனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →